Loading...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 6 வர்த்தக நிலையங்களை குறைந்த வாடகைக்கு வழங்கியதற்காக அரசாங்கத்திற்கு ஒரு கோடி 70 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நட்டத்தை முன்னாள் வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Loading...
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கு விதிமுறைகளை மீறி பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...