Loading...
பாடசாலை மாணவர்களின் மதிய உணவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களுக்கு போசாக்கு உணவு பொதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம், மாணவர் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த போசாக்கு உணவு பொதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Loading...
கல்வியமைச்சின் தீர்மானத்தின்படி, வலய கல்வி பணிமனைகளுடன் இணைந்து அதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, கல்வி நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தொடர்பான உறுதியான நிலைப்பாடு இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Loading...