மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பே சில பெண்களுக்கு பல பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்.
தலைவலி, முகப்பருக்கள், மன அழுத்தம், கை, கால் குடைச்சல், மார்பக வலி மற்றும் உடல் பருமன் ஆகியவைகள் உண்டாகும். இதற்கு ஹார்மோன் மாற்றங்களே காரணமாகும்.
இந்த மாதிரி காலக்கட்டங்களில் அநாவசியமான கோபங்கள் தலைதூக்கும். இதனை சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என தெரியுமா? அந்த சமயத்தில் உங்களை இந்த பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும் குறிப்புகள் இங்கே.
கற்றாழையில் மிளகு :
கற்றாழையின் ஜெல்லை நன்றாக கழுவி 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுப்பொடியை கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டால் மாதவிடாய் வரும் வரும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
கொழுப்பை குறையுங்கள் :
மாதவிலக்கு வரும் 15 நாட்களுக்கு முன்னரிந்தே கொழுப்பு உணவுகளை குறையுங்கள். இவை கல்லீரல் செயலை குறைக்கச் செய்யும். ஆகவே கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணவும்.
சோடியம் கொண்ட உணவுகள் :
உடலுக்கு சாதரணமாகவே சோடியம் நல்லதில்லை. அதிலும் மாதவிடாய் வரும் சமயத்தில் சோடியம் அதிகம் எடுத்துக் கொண்டால் அதிக கோபம், மன அழுத்தம் உண்டாகும். ஆகவே உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள்
வாழைப்பழம் :
வாழைப்பழம் அதிக பொட்டாசியம் கொண்டவை. இதயத்திற்கும் நல்லது. நரம்பு மண்டலத்திற்கு உற்சாகம் அளிக்கும். ஆகவே தினமும் இரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வதை கடைபிடியுங்கள்.
க்ளே மாஸ்க் :
மாதவிலக்கு வருமுன் உங்கள் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் வடியும். இதனை தவிர்க்க சிறந்த வழி முல்தானி மட்டி போன்ற க்ளே மாஸ்க். இவை அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக் கொள்லும். மனதிற்கும் புத்துணர்வு தரும்.
முகப்பரு க்ரீம்கள் வேண்டாம் :
மாதவிடாய் வருவதற்கு முன் உங்கள் சருமம் மிக மிருதுவாகவும், சென்ஸிடிவாகவும் இருக்கும். அப்போது நீங்கல் தடவும் முகப்பரு க்ரீம்களின் ரசாயனங்கள் சருமத்தில் எதிர்விளைவை தரும். ஆகவே அவற்றை தவிருங்கள்.