நுவரெலியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தொகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உடல் கருகி மரணமடைந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கட்டடத்தொகுதியில் பணிபுரியும் கம்பளை உலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மல்சான் ஜயரத்ன அப்புகொட என்பவரே உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா நகரில் 230 அறைகளை கொண்ட 9 மாடி ஹோட்டல் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றது.
குறித்த கட்டடத்தில் தங்குமிட அறையில் தண்ணீர் சுடவைக்க மின்சாரத்தை பயன்படுத்த முற்பட்ட போது மின்சாரம் தாக்கி மரணடைந்துள்ளார்.
இதில் காயங்களுக்கு உள்ளான நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.