கனடாவில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் 17 வயதிற்கும் குறைந்த இருவர் பொலிசில் சரணடைந்துள்ளனர்.
டொராண்டோவைச் சேர்ந்த ஹஷிம் கினானி (23) துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருந்தார்.
பனோரமா கோர்ட் மற்றும் பிஞ்ச் அவேவுக்கு அண்மித்த பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு வெளியில் ட்ரக் வாகனமொன்றிற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இருவர் மீட்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரான ஹஷிம் கினானி உயிரிழந்தார். மற்றையவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 15, 17 வயதுடையவர்கள் ரொரொன்டோ பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர். அவர்கள் வயதில் குறைந்தவர்கள் என்பதால் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.
அவர்கள் மீது முதல் தர கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.