அன்று வடக்கில் இராணுவ ஆட்சி நடத்திய ராஜபக்ஸ அரசு இன்று நாடு முழுதும் நடத்துவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஆட்சியில் ராஜபக்ஸ அரசு வடக்கில் கொடூர ஆட்சி செய்தது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய விரிசலை ஏற்படுத்தியது.
சர்வதேச ஆதரவையும் இந்த அரசு இழந்தது. ஆகவே 2015இல் இந்த அரசு கவிழ்ந்தது.
வடக்கு கிழக்கு மக்கள் ஓரணியில் நின்று ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஸ அரசு நாடு முழுதும் இராணுவத்தை நிறுத்தியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது நாட்டுக்கும், சர்வதேசத்தின் பார்வைக்கும் நல்லதல்ல.
ஆகவே மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கத்தை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.