பாகிஸ்தான் விமான விபத்தில் அந்நாட்டின் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா பலியாகிவிட்டதாக வதந்திகள் வெளியான நிலையில், அது குறித்து உண்மை தற்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 99 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தரையிரங்க முற்பட்டது.
அப்போது விமானம், அங்கிருந்த குடியிருப்பு காலனியில் விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் வீமான ஊழியர்கள் என 97 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் பாகிஸ்தான் நாட்டின் பிரபல மொடல் Zara Abid இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது இன்னும் உறுதிபடத்தப்படாமல் இருந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா இறந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷாஷிர் ஷா, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் வீட்டில் பாதுகாப்புடன் இருக்கிறேன்.
கராச்சிக்குச் செல்லும் விபத்தில் சிக்கிய விமானத்தில் இல்லை. இந்த கடினமான நேரத்தில் தங்கள் உயிர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டை பதிவிட்ட சில மணி நேரங்களிலே யாஷிர் ஷா நீக்கவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.