மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், அரசியல் ஆலோசகருமான மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நடிகர், எழுத்தாளர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் என பல , பரிணாமங்களை கொண்டவர்.
ஜெ. மற்றும் சசிகலா பராமரிக்கும் சொத்துகளுக்கு அவ்வப்போது பங்குதாரர், சொத்துகளை நிர்வாகம் செய்பவர்..ஆடிட்டர், சொத்துகளின் ஆலோசகர் என பல பொறுப்புகளை வகித்தவர்..! திடீரென்று ஒரு வருடம் முன்பு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபட்டார்…!
ஜெ.சொத்து விவரங்கள் அனைத்தும் தெரிந்தவர் சோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அப்போலோவில் அனுமதிக்கப் பட்ட சோ …ஜெ. இறந்த அடுத்த நாளே இறந்தார். அது எப்படி என்று புது குண்டைத்தூக்கிப் போடுகிறார்கள் இணையதளப் போராளிகள்..!
இன்னும் சிலர் அதுவும் ஒரு கொலைதான் என்று கருத்துகளைக் கூற இரு தரப்புகளும் அடித்துக் கொண்டு சாகிறார்கள்…! கொலை என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் ஒரு மாதமாகவே தனது சுய நினைவை இழந்த நிலையில் தான் இருந்தார்.
அவரால் யாருக்கும் எதற்கும் பிரச்சனைகள் வரப் போவதே இல்லை என்கிறது ஒரு தரப்பு…! அடப்பாவிங்களா கருத்துச் சொல்றதுக்கு ஒரே ஒரு ஆண்ட்ராய்டு போன் இருக்கு..அதுக்காக இப்படியெல்லாமா அடுத்தவங்க வாழ்க்கைல விளையாடனும்…!!!