பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சரவதேச விமானம் மட்டுமே இயக்கி வந்ததாகவும் ஊரடங்கால் உள்ளூர் விமான சேவையில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி Sajjad Gul தொடர்ச்சியாக லாகூர்-துபாய் விமான சேவையை மட்டுமே இயக்கி வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
லாகூரில் வசிக்கும் 50 வயதைக் கடந்த விமானி Sajjad Gul, கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விபத்துக்குள்ளான விமானத்தில் 97 பேருடன் பலியாகியுள்ளார்.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் மட்டுமே அதிர்ஷ்டவசமாக தப்பினர். 24 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியுள்ள சஜ்ஜத், இதுவரை சுமார் 17,000 மணி நேரம் விமானத்தை இயக்கியுள்ளார்.
மனைவி மற்றும் 4 பிள்ளைகளுக்கு தந்தையான விமானி சஜ்ஜத், லாகூர் – துபாய் மட்டுமின்றி பிரித்தானியாவுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் விமானம் இயக்கியுள்ளார்.
தமது 24 ஆண்டு கால சேவையில், இதுவரை இதுபோன்ற அவசர நிலையை சஜ்ஜத் எதிர்கொண்டிருக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஒருவரை ஒருவர் சந்தித்து தேற்றும் நிலையில் கூட இல்லாமல் போனது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.