செவ்வாய் கிரகம் வரம் பெறுவதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். விநாயகப் பெருமான் அவர் முன் தோன்றி அவனை நவக்கிரகங்களுள் ஒருவனாகவும் ராசி வீடுகளில் மேஷம், விருச்சிகம் இரண்டின் அதிபராகவும் செய்தார்.
போர் முறைகளை நன்கு கற்றதனால் அங்காரகனை நவக்கிரகங்களுள் ஒரு படைத்தலைவனாகவும், விநாயகர் அவனைச் சகோதரன் என்று அழைத்தால் சகோதரகாரகனாகவும் விளங்க அருள் செய்தார்.
மேலும் விநாயகருடைய சகோதரரான முருகப் பெருமானின் அம்சமாகவும் கருதி மக்கள் அனைவரும் செவ்வாயை வணங்கி வருகிறார்கள். அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சி அளித்த நாள் என்பதால் செவ்வாய்கிழமையை மங்கள வாரம் என்று அழைப்பார்கள். அங்காரகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு.
செவ்வாய்கிழமை சதுர்த்தி திதியில் விநாயகர் காட்சி அளித்தார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை தேய்பிறை எதுவானாலும் செவ்வாய்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் தோஷம் நீங்கும்.
செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற பெயரும் உண்டு. அவன் குழந்தையாக இருக்கும் போது பூமிதேவி எடுத்து வளர்த்த காரணத்தால்இந்தப் பெயர் உண்டாயிற்று.