மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் மூலிகை மருத்துவம் அருளினார்.
அது வேற ஒன்றும் இல்லை காயகல்பம் தான். காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்தாகும்.
சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினை அருளியுள்ளார்.
காயகல்பம் எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்
- வெள்ளை கரிசலாங்கண்ணி – 300 கிராம்,
- தூதுவளை – 70 கிராம்,
- முசுமுசுக்கை – 70 கிராம்,
- சீரகம் – 70 கிராம்
இவற்றை எல்லாவற்றையும் பொடியாக்கிக் கொள்ள வேள்ள வேண்டும்.
சீரகம் மட்டும் தனியாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு டம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
இந்த சூரணத்தின் பயன்கள்:
இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.
சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.
சிறுகுடல் உறிஞ்சிகள் தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.
கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் எதுவும் நம்மை அண்டாது.
இதற்கு பத்தியம் எதுவும் தேவையில்ல, காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் இது விளங்கும்.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.
அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். மக்கள் நோயின்றி உலகில் வாழ வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பமும்.