Loading...
மத்திய மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இருவர் பலியாகியுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். குலரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் எலிக்காய்ச்சலும் தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் இருவரே எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Loading...
தொடர்ந்தும் 12 பேர் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 24 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...