Loading...
பிரேசிலில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
Loading...
ட்ரம்ப் அரசு முன்னரே ஐரோப்பா, சீனா, லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு பயணத் தடை விதித்தது.
கடந்த வாரம்தான் பிரேசிலுக்கு பயணத் தடை விதிப்பது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் பரீசிலித்து வந்தது. தற்போது பயணத் தடையை உறுதிப்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...