தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். மலையாள சினிமாவை சேர்ந்த இவர் தற்போது மின்னல் முரளி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
லோக்கல் ஏரியாவில் இருக்கும் சூப்பர் மேன் போன்ற கதையான இப்படத்தை பஷில் ஜோசப் என்பவர் தான் இயக்கி வருகிறாராம். இவர் ஏற்கனவே டொவினோவை வைத்து கோதா என்ற படத்தை இயக்கியவர்.
மின்னல் முரளி படத்தில் மற்ற படங்களை போல ஸ்டண்ட் காட்சிகள் இருக்கூடாது என்பதால் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் வலாட்ரிம்பர்க் என்பவரை அழைத்து வந்துள்ளாராம்.
இப்படத்திற்காக கேரளாவில் காலடி என்கிற இடத்தில் மிகப்பெரிய சர்ச் செட் ஒன்றை அமைத்துள்ளனராம். ஆனால் கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் படப்பிடிப்பு செட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனால் படக்குழு போலிஸில் புகார் அளித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளது.