முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று (26-05-2020) இரவு ஏழு மணி அளவில் காட்டு யானையின் தாக்கத்திற்கு உள்ளாகிய வயோதிபர் தற்போது மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நாகலிங்கம் முத்துலிங்கம் என்பவர் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 14 ஆம் கட்டை பகுதியில் மாலை 7.00 மணியளவில் காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே விபத்தில் காயமடைந்த முறிந்த நிலையில் இருந்த காலில் யானை தாக்கியதால் கால் முடிவடைந்த நிலையில் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய துவிச்சக்கர வண்டியையும் யானை தாக்கி சேதம் ஆற்றியுள்ளது.
யானை தாக்கியதை தொடர்ந்து அவர் எழுப்பிய குரலில் அயல் கிராமத்தவர்கள் வருகைதந்து உடனடியாக 1990க்கு அழைப்பை எடுத்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அவர் மாங்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அவர் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.