பிரித்தானியாவில் மருத்துவமனையில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் இலங்கை மருத்துவரின் திருமணம் மிகவும் எளிதாக நடந்த நிலையில், இந்த திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர்கள் 34 வயது செவிலியர் ஜான் டிப்பிங் மற்றும் 30 வயது மருத்துவர் அன்னலன் நவரத்னம் ஆகியோர்.
இந்த தம்பதி தங்கள் திருமணத்தை வரும் ஆகஸ்டு மாதம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் வடக்கு அயர்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து தங்கள் குடும்பத்தினர்கள் பாதுகாப்பாக லண்டன் செல்ல முடியுமா என்ற அச்சம் காரணமாக திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் குடும்பத்தாரின் உடல் நலனே பிரதானம் என்பதால், இருவரும் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள தேவாலயத்தில் மணம் முடிக்க முடிவு செய்தனர்.
அதன் படி கடந்த 24-ஆம் திகதி இந்த தம்பதி எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு இரண்டு சாட்களும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஜும் ஆப் மூலம் வீடியோவில் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமணம் குறித்து செவிலியரான ஜான் டிப்பிங் கூறுகையில், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கும்போதே, இந்த திருமணத்தை நாங்கள் நடத்த விரும்பினோம். இருப்பினும் தற்போது இருக்கும் சூழ்நிலையால், அவர்கள் அனைவரையும் திரையில் பார்க்க வைத்துவிட வேண்டும், தங்களால் முடிந்தவரை செய்தோம்.
நாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதியைப் பெற மருத்துவமனையில் இருக்கும் chaplaincy team(சாப்ளேன்சி குழு) கடுமையாக உழைத்தது என்று கூறுவேன்.
எங்களின் திருமணம் 2 வாரங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக திருமணத்திற்கு தேவையான, எனது உடை, எங்கள் மோதிரங்கள் மற்றும் எங்களுக்குத் தேவையான பிற பொருட்களை வாங்கவில்லை.
எனவே எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய விரைந்தோம். ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த திருமணம் செயின்ட் தாமஸ் என்.எச்.எஸ். அறக்கட்டளையின் ஆன்மீக சுகாதாரத் தலைவர், Revd Mia Hilborn, ஜான், அண்ணலன் மற்றும் தேவாலயத்திற்குள் இரண்டு சாட்சிகள் மட்டுமே இருந்தனர்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, நெருக்கமாக இருந்தது. எங்களுக்கு சாட்சியாக இருந்த ஒருவர் திருமணத்தை நேரடியாக குடும்பத்தினருக்கு ஒளிபரப்பினார். இதனால் அவர்கள் பார்க்க முடிந்தது.
இது ஒரு அருமையான திருமணமாக இருந்தது. மருத்துவமனை தேவாலயம் அழகாக இருக்கிறது. நாங்கள் வேலை செய்யும் இடத்திலும், ஒரு மருத்துவமனையிலும் திருமணம் செய்துகொள்வது என்பது சிறப்பானது, மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
எங்கள் ஒரு அழகான திருமணமாக இருந்தது. இதை எப்போதும் நாங்கள் நினைவில் வைத்திருப்போம். ஒரு கவலையான நேரத்தின்(கொரோனா வைரஸ் தாக்கம்) நடுவில் நடக்கும் ஒரு நல்ல விஷயம்.
அதை சாத்தியமாக்குவதற்காக உதவிய haplaincy team-க்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
இந்த திருமணம் குறித்து அன்னலன் கூறுகையில், ஜானும் நானும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம் நான் முன்மொழிந்த தருணம். நாங்கள் ஒருவருக்கொருவர் நம்மை அர்ப்பணிக்க முடிந்தது என்பதற்கும், அதைச் செய்ய மருத்துவமனை எங்களுக்கு ஆதரவளித்ததற்கும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
செயின்ட் தாமஸ் என்.எச்.எஸ். அறக்கட்டளையின் ஆன்மீக சுகாதாரத் தலைவர், Revd Mia Hilborn கூறுகையில், ஊழியர்களுக்கு இது போன்ற ஒரு சவாலான நேரத்தில், chaplaincy குழுவாக நாங்கள் எங்களால் முடிந்த ஆதரவை வழங்க முயற்சிக்கிறோம்.
திருமணங்கள் போன்ற பெரிய கொண்டாட்ட நிகழ்வுகளை தாமதப்படுத்துவது, எவ்வளவு வருத்தமானது என்பதை அறிவோம். செயின்ட் தாமஸில் உள்ள அழகான தேவாலயத்தில் ஜான் மற்றும் அண்ணலனை திருமணம் செய்ய சிறப்பு அனுமதி கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இது ஒரு அருமையான சேவை. அதன் ஒரு பகுதியாக நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.