பொதுவாக ஒருசிலருக்கு பிறக்கும் போதே முகம் மற்றும் உடலில் பல தழும்புகள், மச்சம், மரு போன்றவை இருக்கும்.
அந்த மாதிரியான சில சிறிய தழும்புகள் சிலருக்கு அழகாக இருந்தாலும், ஒரு சிலருக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இயற்கை முறையில் இந்த தழும்புகளை போக்குவதற்கு, சூப்பரான டிப்ஸ் இதோ
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் நமது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினமும் 10 நிமிடங்கள் தழும்பு உள்ள பகுதியில் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தழும்புகள் மறைந்து, நமது சருமம் மென்மையாக மாறும்.
ஐஸ் கட்டி
ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் கட்டி தழும்பு உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் நம் உடம்பில் இறுக்கமாக உள்ள தசைகள் மென்மையாகும். மேலும் ஐஸ் கியூப் எடுத்து தழும்பு உள்ள இடத்தில் மென்மையாக 5 நிமிடம் தேய்க்க வேண்டும்.
ஆரஞ்சு ஆயில்
நமது சருமத்தில் காயம் அல்லது தழும்புகள் இருக்கும் இடத்தில், விட்டமின் E சத்துக்கள் நிறைந்த ஆரஞ்ச் ஆயில் பயன்படுத்த வேண்டும். மேலும் விட்டமின் E சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் பிறப்பில் ஏற்படும் தழும்புகள் மறைந்துவிடும்.
கிவி பழம்
விட்டமின் A, C சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகள் ஆகியவை தழும்புகளை போக்கும் தன்மைகள் கொண்டது. எனவே கிவி, ஆப்ரிகாட் பழங்களின் சதைகளை எடுத்து மசித்து ஆரஞ்சு பழச் சாறுடன் சேர்த்து தழும்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால் தழும்புகள் இயற்கையாக மறைந்து விடும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தின் சாறு, இயற்கையாகவே பிளீச்சிங் செய்வதில் பயன்படுகிறது. எனவே எலுமிச்சை சாற்றினை தழும்பு உள்ள பகுதியில் நன்கு தேய்த்து ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தக்காளி சாறு
தக்காளியில், ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளதால், அதனுடைய சாறு எடுத்து அதை தழும்பு உள்ள பகுதியில் தடவி ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதேபோல் வாரம் மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.