மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகமென ETH ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தாமதமாக தொடங்கும் எனவும், ஆனால் அது கடுமையான இழப்புகளை ஏற்படுத்தும் என புதனன்று ETH ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா முதற்கட்டத்தில் பரவியது போன்று இந்த இரண்டாவது அலை இருக்காது என குறிப்பிட்ட ETH ஆராய்ச்சியாளர்கள்,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கும், ஏனெனில் பொதுமக்கள் கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பில் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் தொற்றுநோயின் தொடக்க காலத்தை விட தற்போது பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது அலை காலகட்டத்தில், கொரோனா மிகவும் தாமதமாக பரவும் என்பது ஒருவகையில் சாதகமான தகவல் என்றால், அது அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மையில் கவலை தரும் செய்தி என்கிறார் பேராசிரியர் Dirk Mohr.
பேராசிரியர் Dirk Mohr-ன் ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டாவது அலையானது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல, முதல் அலையைவிடவும் அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்றார்.
இரண்டாவது அலையின் போக்கைப் பொறுத்து, ஆய்வின்படி, இது 5,000 மரணங்கள் வரை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் பேராசிரியர் Dirk Mohr.
ஆய்வுகளின் அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் 10 முதல் 20 வயதுடையவர்கள் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணி என தெரியவந்துள்ளது.
35 முதல் 45 வயதுடையவர்களும் வைரஸ் பரவுவதற்கு சராசரிக்கும் மேலே பங்களிப்பை அளித்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் சராசரியை விடவும் கணிசமாக கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்துள்ளனர்.
சமூக விலகல் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் பாடசாலைகளில் கொரோனா பரவலை பாதியாக குறைக்க முடிந்தால்,
சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகையில், கொரோனா இரண்டாவது அலை 5,000 உயிர்களை பலிவாங்கும் என்பது 1,000 எண்ணிக்கையில் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளது.