கட்சி யாப்பை மீறி வேறு கட்சியூடாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் எம்.பிக்கள், உட்பட 102 முக்கியஸ்தர்களை கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்ைக எடுத்துள்ளது.
ஐ.தே.க.அங்கத்தவராக இருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்காக கையொப்பமிட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சி யாப்பின் 3(எச்) சரத்தின் கீழ் இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கட்சி யாப்பை மீறி வேறு கட்சியூடாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பில் அவர்களிடம் விளக்கம் கோரியுள்ள தாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்படுபவர்களிடையே கடந்த அரசில் பதவி வகித்த முக்கிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 50 ற்கும் மேற்பட்டவர்கள் அடங்குவதாக அறிய வருகிறது.
சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, கயந்த கருணாதிலக்க, ஹரீன் பெர்ணாந்து, எரான் விக்கிரமரத்ன, மங்கள சமரவீர, சுஜீவ சேனசிங்க, ஹிருணிகா பிரேமசந்திர, ஹர்ஷ டி சில்வா, எஸ்.எம்.,மரிக்கார், முஜீபுர் ரஹ்மான், அஜித் பி பெரேரா, ரஞ்சன் ராமநாயக்க, சரத் பொன்சேக்க, பீ.ஹெரிசன், சந்திராணி பண்டார, ரவீந்திர சமரவீர, சாந்த சிசிர குமார, அசோக்க பிரியந்த. லக்கி ஜயவர்தன, ரஞ்சித் அலுவிஹாரே, வசந்த அலுவிஹாரே, புத்திக பத்திரண, நளின் பண்டார, ஆனந்த குமாரசிறி, கபீர் ஹாசிம், இம்ரான் மஹ்ரூப், திலீப் வெதஆரச்சி, சந்திம கமகே, துசித்த விஜேமான்ன, மயந்த திசாநாயக்க, உட்பட முன்னாள் ஐ.தே.க எம்.பிக்கள் பலர் இதில் அடங்குவதோடு மாகாண சபை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்,(