திருகோணமலை- மங்கி பிரிட்ஜ் நான்காவது இராணுவ படையணி முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் காத்தான்குடி கொரோனா மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. .
கடந்த 19 ஆம் திகதி குவைத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களை திருகோணமலை மங்கி பிரிட்ஜ் நான்காவது இராணுவ விசேட படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 24ம்திகதி களுத்துறை, பயாகலயைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவருடன் இருந்த இரண்டு பெண்கள் தொடர் தலைவலி காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை அந்த பெண்கள் இருவருக்கும் பரிசோதனையின் பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை நுண்ணுயிரியல் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனுராத ஜயதிலக தெரிவித்தார்.
இதனையடுத்து அவ்விருவரையும் காத்தான்குடி கொரோனா மத்திய நிலையத்திற்கு நேற்று அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.