விக்ரம் பிரபு இது என்ன மாயம், வாகா போன்ற படங்களால் கொஞ்சம் சறுக்கலில் உள்ளார். இவருக்கு இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் தகராறு படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயக் கூட்டணியில் வீரசிவாஜி படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளார். விக்ரம் பிரபு சறுக்கலில் இருந்து மீண்டாரா? பார்ப்போம்.
கதைக்களம்
விக்ரம் பிரபு கால் டாக்ஸி ட்ரைவராக பாண்டிச்சேரியில் இருக்கிறார், அவர் அனாதையாக இருந்தாலும் சொந்த அக்கா போல் பாத்துக்கொள்கிறார் வினோதினி.
வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ரூ 25 லட்சம் தேவைப்படுகின்றது.
கால் டாக்ஸி விற்று ரூ 5 லட்சம் ஏற்பாடு செய்கிறார், அந்த நேரத்தில் தான் யோகிபாபி, ரோபோ ஷங்கர் மூலம் ஜான் விஜய் அறிமுகம் கிடைக்கின்றது.
அவர் குறைந்த பணத்திற்கு அதிக பணம் தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றி செல்கிறார். அதன் பிறகு அந்த கும்பலை கண்டுப்பிடித்தாரா, குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விக்ரம் பிரபு கால் டாக்ஸி ட்ரைவராக வந்தாலும் கலர்புல்லாக தான் இருக்கிறார், ஆக்ஷனில் அதிரடி காட்டினாலும் இன்னும் ரொமான்ஸில் கஷ்டப்படுகின்றார். அமைதியாக நடிக்க சொன்னால் செம்ம ஸ்கோர் செய்துவிடுகிறார், அதே நேரத்தில் துறுதுறு நடிப்பில் முன்னேற்றம் தேவை சார்.
ஷாம்லி நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கின்றார், பேபி ஷாம்லி தற்போது ஹீரோயின் ஷாம்லி, ஆனால், இவர் நடிப்பதற்கு கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லை, அதிலும் டப்பிங் வாய்ஸ் எங்கும் செட் ஆகவில்லை. வழக்கமான ஹீரோயின் போல் காதல், டூயட் மட்டுமே.
படத்தின் பெரிய ப்ளஸ் யோகிபாபு, ரோபோ ஷங்கர் கூட்டனி தான், ரமேஷ், சுரேஷ் என காமெடியில் கலக்கியுள்ளனர், அதிலும் யோகி பாபு பேச ஆரம்பித்தாலே சிரிப்பு சரவெடி தான், ,மேலும் ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் எல்லாம் வழக்கமான ஓவர் ஆக்டிங் தான்.
படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமலே சென்றாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு படம் செம்ம சூடு பிடிக்கின்றது, வேகவேகமாக செல்லும் திரைக்கதையில் இடைவேளை வர, அடுத்து என்ன என்று நிமிர்ந்து உட்கார, அதன் பிறகு இயக்குனருக்கே படத்தை எங்கு கொண்டு செல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார்.
இமான் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் எங்கோ கேட்டது போலவே ஒரு பீலிங், அதைவிட பின்னணி இசை படத்தில் காட்சி வருவதற்கு முன்பே, இசை வந்து காதை பதம் பார்க்கின்றது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதியில் வரும் ஒரு சில சேஸிங் காட்சிகள்.
ஒளிப்பதிவு பாண்டிச்சேரியை ஏதோ பாரீன் போல் காட்டியுள்ளார்கள்.
பல்ப்ஸ்
திரைக்கதை குறிப்பாக இரண்டாம் பாதியில்.
காதல் காட்சிகள், லாஜிக் மீறல்கள்.