Loading...
ஸ்ரீலங்காவில் கொரோனா பரவாமல் இருக்க கடந்த நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு இருந்தது.
எனினும் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவருக்கு கம்பஹா நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Loading...
இவருக்கு 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஊரடங்கு உத்தரவை மீறி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
அத்துடன் குறித்த நபருக்கு சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...