இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அங்கு பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது ஜப்பானிய முதலீட்டாளர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இலங்கையில் இருந்த தீவிரவாதத்தை எமது அரசின் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.
அதன் பின்னர் அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் முதலீடுகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தற்போது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள நீங்களும் முன்வர வேண்டும் என ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.