Loading...
நாம் காலையில் தலைக்கு குளிப்பதை விட, இரவில் குளிப்பதால் தான் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.
Loading...
எனவே நாம் இரவில் தலைக்கு குளிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இரவில் தலை குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- நாம் தினமும் காலையில் தலைக்கு குளிக்கும் போது தலைமுடியை சரியாக அலச போதுமான நேரம் இருக்காது. ஆனால் இரவில் அதிக நேரம் நமக்கு கிடைப்பதால், நிதானமாக தலைக்கு குளிக்க முடிகிறது.
- இரவில் தலைக்கு குளிக்கும் போது, நமது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அதிக நேரம் இருக்கிறது. இதனால் நமது கூந்தல் வறட்சியின்றி, வெடிப்பின்றி பாதுகாக்கப்படுகிறது.
- நாம் இரவில் தலைக்கு குளித்தால், நமது கூந்தல் மிகவும் பலவீனமாக இருப்பது தடுக்கப்படுவதுடன், சூரிய ஒளிப்படும் போது கூந்தல் கற்றைகள் பாதிக்கப்படுகிறது.
- காலையில் தலைக்கு குளித்த பின் நாம் செய்யும் கூந்தல் அலங்காரத்தால், நமது கூந்தலின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். ஆனால் இரவில் கூந்தலை அலங்காரம் செய்யாமல் விடுவதால், கூந்தல் பாதிப்பது தடுக்கப்படுகிறது.
- காலையில் தலைக்கு குளித்து கூந்தலை காய வைப்பதை விட, இரவில் தலைக்கு குளிக்கும் போது நன்றாக கூந்தலை துவட்டுகிறோம். இதனால் நமது தலையில் நீர் கோர்க்கும் பாதிப்புகள் ஏற்படாது.
Loading...