குழந்தை என்கிற வரம் கையில் கிடைக்கும்போது, தான் தாய்மையை அடைந்த மகிழ்ச்சிக்கும் எதுவும் ஈடு இணை ஆக முடியாது. இருப்பினும் அதற்காக அவர்கள் கடந்து வந்த பாதைகளை அத்தனை சுலபமாகவும் கடந்துவிட முடியாது.
இத்தனை இருந்தாலும் எப்போதும் கம்பீரமாக தன்னம்பிக்கையுடன் இருப்பதுதான் பெண்மையின் அழகு. அந்த அழகை ஆராதிக்க உங்களையும் நீங்கள் கவனித்துக்கொள்ளுதல் அவசியம். எனவே குழந்தை பிறந்த பிறகும் உங்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் அவர்களின் தோற்றம் மற்றும் சருமத்தையும் மாற்றிவிடும். அதாவதுசரும நிறம் மங்கி, பொலிவிழந்த தோற்றம், முடி உதிருதல், கருவளையம் இப்படி பல விஷயங்களை குழந்தை பெற்ற பிறகு சந்திக்க நேரிடும்.
இவற்றை சரி செய்ய முகத்தில் பொலிவை உண்டக்க தினமும் இரண்டு முறை முகத்தை கழுவி சுத்தம் செய்யுங்கள். உங்களுக்கு டிரை ஸ்கின் என்றால் திரவமான மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யுங்கள்.
தூக்கம்: குழந்தை பெற்ற பிறகு தூக்கம் என்பதை மறந்துவிட வேண்டும் என்பார்கள். ஏனெனில் குழந்தை எப்போது தூங்கும் விழித்துக்கொண்டிருக்கும் என தெரியாது. இருப்பினும் உங்களின் நலன் கருதியும் தினமும் 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். தூங்குவதும் உங்கள் சருமத்தில் புத்துணர்ச்சி அளிக்கும்; பிரகாசமளிக்கும்.
ஆரோக்கியமான உணவு: நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். கேரட், பீட்ரூட், கீரை , புரக்கோலி அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக தண்ணீர் குடியுங்கள்.
கெமிக்கலை தவிருங்கள்: குழந்தை பெற்ற பிறகும் ஹார்மோன்கள் சமநிலையை அடைந்திருக்காது. எனவே இந்த சமயத்தில் அதிக கெமிக்கல் நிறைந்த காஸ்மெடிக்ஸை தவிர்ப்பது நல்லது.