கணினியின் கீபோர்டின் மேல் பக்கத்தில் F1ல் ஆரம்பித்து F12 வரைக்கும் செயல்பாட்டு விசைகள் இருக்கும். இந்த பன்னிரெண்டும் எதற்கு அதிகம் பயன்படுகிறது என நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
வாருங்கள் தெரிந்து கொள்வோம்
F1 – எல்லா செயல்பாடுகளுக்குமான Help Screenஐ திறக்க இது பயன்படுகின்றது.
F2 – நாம் செலக்ட் செய்யும் எந்தவொரு File மற்றும் Folderன் பெயரை மாற்றம் (Rename) செய்ய இது பயன்படுகின்றது.
F3 – இதை அழுத்தினால் தேடுதல் (Search) ஆப்ஷன் வரும். இதன் மூலம் நாம் தேவைப்படும் அப்ளிகேஷன்களை தேடி கொள்ள முடியும்.
F4 – Alt F4 இணைத்து அழுத்தினால் ஆக்டிவாக இருக்கும் வலைதளம் மூடிவிடும்.
F5 – இது Document தளத்தை Refresh மற்றும் Reload செய்ய உதவுகின்றது.
F6 – இது இண்டர்நெட் தளத்தில் Cursorஐ address barக்கு கொண்டு செல்ல பயன்படுகின்றது.
F7 – மைக்ரோசாப்ட் Wordல் வரும் எழுத்து பிழையை (Spell Check) சரி செய்ய இது உதவி செய்கின்றது.
F8 – கணினியை ஆன் செய்யும் போது விண்டோஸில் Boot Menuவை இயங்க வைக்க இந்த F8 உபயோகப்படுகின்றது.
F9 – இமெயில் சம்மந்தமான outlookல் புதிதாக எதாவது மெயில் வந்தோ அல்லது போயோ இருக்கிறதா என Refresh செய்து பார்க்க இது உதவுகின்றது.
F10 – ஏற்கனவே திறந்திருக்கும் அப்ளிகேஷனின் Menu Barஐ ஆக்டிவேட் செய்ய இது பயன்படுகிறது. மௌசில் வலது கிளிக் செய்வதை Shift F10 அழுத்தியும் செய்ய முடியும்.
F11 – இண்டர்நெட் தளத்தின் திரையை பெரிதாகவும் அதை மீண்டும் சிறிதாகவும் மாற்ற இது பயன்படுகின்றது.
F12 – மைக்ரோசாப்ட் Wordல் save as dialog box தளத்தை திறக்க இது உதவி செய்கின்றது.