ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலம் வரை ஆரோக்கியமாக இருக்கவே விரும்புவான். மனிதனின் ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்டதாகும்.
சில விடயங்களை பின்பற்றுவதன் மூலம் நம் ஆரோக்கியத்தை பேணி காக்க முடியும்.
அளவாக காபி அருந்துதல்
காபியை குறைந்த அளவு குடித்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதில் பல கெமிக்கல்கள் இருந்தாலும், இதில் உள்ள சில கெமிக்கல்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. அதிக அளவில் இதை பருகினால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
உருளைகிழங்கு
உருளைகிழங்கில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் உள்ளது. இதில் அடங்கியிருக்கும் கலோரிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகளவில் தருகின்றது.
தூக்கம்
சரியான அளவு மனிதர்கள் தூங்கினாலே, பல நோய்கள் வருவதை தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் 10லிருந்து 11 மணி நேரமும், பெரியவர்கள் 9 மணி நேரமும் தூங்குதல் நலம். தூக்கமின்மையால் மன அழுத்தம், டயபிடீஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
ஆப்பிள் சாப்பிடுவது
An apple a day keeps doctors away! இது புகழ் பெற்ற வாக்கியம் ஆகும். ஆப்பிளை தினமும் சிறிய அளவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைப்பதுடன், வயிற்று சம்மந்தான நோய்கள் எதுவும் வராது.
தண்ணீர் குடிப்பது
தினமும் 2 லிட்டர் தண்ணீர் அருந்துதல் உடல் ஆரோக்கியத்தையும், தோல் சம்மந்தமான நோய்கள் ஏதும் வராமலும் பாதுகாக்குமாம்!. குழாய்லிருந்து வரும் தண்ணீர், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை விட ஆரோகியமானதாகும்.
வாழைப்பழம்
தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டால், இதயம் துடிப்பு சீராக இருப்பதுடன், கண்பார்வையும் பிரகாசமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்கும் தன்மையும் வாழைப்பழத்தில் உள்ளது.
நடைப்பயிற்சி
தினமும் ஒரு அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது அவசியமாகும். இது உடலில் உள்ள நரம்புகளை சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது . மேலும் சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.