தமிழகத்தில் இரண்டு மனைவிகளை கொலை செய்ததது ஏன் என்பது குறித்து அவரது கணவர் கொடுத்த வாக்குமூலம் பொலிசாரை அதிர வைத்துள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த கடுக்கு மேனாம்பேட்டை சேர்ந்தவர் கோபலா கிருஷணன். 35 வயதான இவர் லாரி ஒட்டுனராக இருந்து வந்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டதால், இந்த தம்பதிக்கு 3 வயதில் யஷ்வந்த் என்ற மகன் உள்ளார்.
கோகிலாவுடன் தாய் உமாவும் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 24-ஆம் திகதி உமா வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது, குடிபோதையில் இருந்த கோபால கிருஷணன், மனைவி கோகிலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக வீட்டின் வெளியே இருக்கும் வராண்டாவில் உமா படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து கோபலாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே செல்ல, உள்ளே குழந்தை அழும் சத்தைத்தைக் கேட்டு உமா உள்ளே சென்று பார்த்த போது, கோகிலா தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உமா, அவரின் உடலை கீழே இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, கோகிலாவின் தாய் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பொலிசார் கோபாலகிருஷ்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவருக்கு ஏற்கனவே செங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ராஜேஸ்வரி என்பவரை கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
தன்னுடைய முதல் மனைவி ராஜேஸ்வரியை கொன்றுவிட்டு, சிலிண்டர் வெடித்து இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். ராஜேஸ்வரியின் பெற்றோர் செங்குன்றம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கோபால கிருஷ்ணன் வசமாக சிக்கியுள்ளார்.
அதன் பின் அந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த கோபலாகிருஷ்ணன், உண்மையை மறைத்து கோகிலாவை காதலித்து 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அளவிற்கு அதிகமாக மது குடித்ததால், என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது, மிகவும் மோசமானவனாக மாறிவிடுவேன், அதுவே என் இரண்டு மனைவிகளின் கொலைக்கு காரணம் என்று கோபால கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்ததையடுத்து, கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.