நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனமொன்றில் உதிரிப்பாகங்களை திருடிய பலே கில்லாடியை அந்த பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து, முறையாக கவனித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (31) காலை இந்த சம்பவம் நடந்தது.
ஹட்டன் பொலிஸ் பிரிவில் தேயிலை தோட்டமொன்றில் இந்த சம்பவம் நடந்தது. வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்திலிருந்தே பாகங்கள் கழற்றப்பட்டுள்ளன.
தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த இளைஞர் குழுவொன்று வாகனத்தில் உதிரிப்பாகங்கள் கழற்றப்படுவதை அவதானித்து, அங்கு சென்றபோது, திருடர் குழு தப்பியோடியது. ஒருவர் விரட்டிப் பிடிக்கப்பட்டார்.
அவர் பிரதேசவாசிகளால் நையப்புடைக்கப்பட்டு, ஹட்டன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.அந்த பகுதியில் வீதி புனரமைப்பில் ஈடுபட்டு வந்த கண்டியை சேர்ந்த நிறுவனமொன்றிற்கு சொந்தமான டிப்பரிலேயே திருட்டு இடம்பெற்றது.
அந்த பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் குழுவொன்றே திருட்டில் ஈடுபட்டுள்ளது.