மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக யார் காலிலும் விழத்தயாராக இருப்பதாக பிரபல நடிகர் ஆனந்தராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான ஆனந்தராஜ் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை கோவிலாக மாற்றுவதற்கு யார் கால்களிலும் விழத்தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அதை நினைவு இல்லமாக இல்லாமல், அதில் ஜெயலலிதாவின் சிலைவைத்து, மூன்று வேளை பூஜையும் நடத்தக் கூடிய கோவிலாக, தியானம் செய்யும் இடமாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு காரணம் பெண்கள் அனைவரும் ஜெயலலிதாவை மனதார மதிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க சசிகலா அவசரம் காட்ட வேண்டியதில்லை. அதை மக்களும் விரும்பவில்லை என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.