பாராட்டும், புகழும் கூடும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். பெற்றோரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். இடை விடாது செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும். செய்யும் காரியங் களில் உங்கள் திறமை மேம்படும்.
இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட கோபதாபங்கள் விலகும்.
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.
நிதி நிலை உயரும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சுய தொழில்தொடங்கும் எண்ணம் மேலோங்கும். நூதனப் பொருட் களின் சேர்க்கை உண்டு.
இனிமையான நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும. தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
எதிரிகள் இனிமையாக அமைய வழிவகை செய்து கொள்ளும் நாள். வியாபார விருத்தி ஏற்படும். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். தனலாபம் வந்து சேரும்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வரவு எதிர் பார்த்தபடியே வந்து சேரும். தைரியமும்இ தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்தினைவர்.
குடும்பச் சுமை கூடும் நாள். பயணத்தை மாற்றியமைப்பீர்கள். வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும. எதையும் யோசித்துச் செய்வது நல்லது.
தொட்டது துலங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரும் வாய்ப்பு உருவாகும். உத்யோக முன்னேற்றம் உண்டு.
தலைமைப் பதவிகள் தேடி வரும்நாள். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். புது வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும்.