Loading...
ஒஸ்கர் போட்டியில் விசாரணை தவறவிட்ட வாய்ப்பை மற்றொரு இந்திய திரைப்படம் பிடித்துள்ளது. அது எந்த படம்?
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஒஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ திரைப்படம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியலில் ‘விசாரணை’ படம் இடம்பெறவில்லை என்றதும் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு இந்திய படம் ஒன்று ஒஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் மலையாளத்தில் உருவாகி வரும் ‘வீரம்’ படம் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுத்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஜெப் ரோன் என்பவர் இசையமைத்துள்ளார். காரி கிம்மெல் என்பவர் பாடியிருக்கிறார்.
Loading...
இப்படத்தின் பாடலுடன் மொத்தம் 91 பாடல்கள் ஆஸ்கர் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இத்தனை பாடல்களில் இந்த பாடல் ஆஸ்கருக்கு தேர்வாகுமா? என்பது வரும் ஜனவரி 24-ந் திகதிதான் தெரியவரும். ‘வீரம்’ படம் பிரபல ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய மாபெரும் காவியமான ‘மேக்பெத்’ (Macbeth)-ஐ தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் குணால் கபூர் நடித்துள்ளார். மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்திய அளவில் மும்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
Loading...