யாழ். குரும்பசிட்டி கிழக்குத் தெல்லிப்பழைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி கடந்த 12ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகேந்திரன் வினித்தா எனும் குறித்த சிறுமி விட்டிலிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
மேலும் குறித்த சிறுமி தொடர்பில் இது வரை எந்த தகவலும் அறியப்படவில்லை என சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தின்தொலைபேசி இலக்கமான 021 224 0222 அல்லது 0718591321 ,071 859 1321, என்றதொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.