Loading...
தேவையான பொருட்கள் :
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவைகேற்ப
மாதுளம் பழம் – 1
சாட் மசாலா – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
* மாதுளம் பழத்தில் இருந்து முத்துக்களை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
Loading...
* ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின் அதில் மாதுளம் பழ முத்துக்கள், சாட் மசாலா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
* சத்தான மாதுளம் ரைத்தா ரெடி.
* புலாவுடன் வைத்து பரிமாறலாம். புளிக்காத தயிரை உபயோகித்தால் நன்றாக இருக்கும்.
* அதை ரைத்தாவாகவும் சாப்பிடலாம். சாலட்டாகவும் சாப்பிடலாம்.
Loading...