தனக்கு ஒரு காதலியை தேடி தருமாறு ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நேற்று நாமல் ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது நாமல் ராஜபக்சவின் காதலி ஒருவர் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்து வெளியிட்டமை, குறித்து ஊடகவியலாளர் ஒருவர் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நாமல், அப்படி காதலி யாரும் கிடையாது. யாரேனும் இருந்தால் தேடித் தாருங்கள்.
அரசாங்கத்தினர் வீதியில் வெள்ளைக் கோட்டை வாகனத்தில் தாண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் தொடர்பாக விசாரணை நடத்துகின்றார்கள்.
ஆனால் மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் நிதி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் எதனையும் நடத்துவதில்லையே என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.