முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் கலைஞர்..! இயல், இசை, நாடகம், அரசியல் என தொண்ணூறு வருட சரித்திரம்..!
தனது அசுர உழைப்பு, சாதுர்யம், எழுத்து,வீரம் என படிப்படியாக முன்னேறிய ஒரு அசுர சக்தி..!
உலகம் உள்ளவரை கலைஞர் எனும் மகா தலைவர் புகழ் நீடித்து நிற்கும். ஆனால்..? வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பெரும் சாதனையாளராக தெரியும், நமது கலைஞரை மிகவும் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..!?
அவருக்கென்று நிறைவேறாத ஆசைகளும் ஏக்கமும் நிறைய உண்டு..!முதலில் தனது ஆசை மகனும் மூத்த மகனும் தனது கனவுப் புதல்வனுமாகிய மு.க. முத்து..!
முத்துவை மட்டுமே தனது சொத்தாக நினைத்தவர் கலைஞர். மக்கள் திலகத்திற்கு எதிராக களம் இறக்கி கலை,அரசியல் இரண்டிற்குமே தனது வாரிசாக பார்த்து பார்த்து செதுக்கினார்..!
அதிக சிரத்தை எடுத்தார். அவர் எண்ணியது போலவே முத்துவும் எம்ஜிஆருக்கு பலத்த போட்டியாக தனது சினிமா வாழ்கையைத் துவக்கினார்..!
எம்ஜிஆரின் நகல் போலவே முன்னிறுத்தப்பட்டார். ஆனால், விதியோ சதியோ தெரியாது..! குடிக்கு அடிமையாகி..மீளமுடியாமல் பெயரைக் கெடுத்தார்..!
நலிந்த கலைஞர்களுக்கு ஜெ. கொடுத்த ஐந்து லட்சம் ரூபாயை மேடைஏறி, வாங்கி கலைஞர் மனதை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார்..! தன் மகனை சிறந்த மனிதனாக உருவாக்க நினைத்த கலைஞரின் நிறைவேறாத முதல் கனவு.
அடுத்து எம்ஜிஆர் இருக்கும் போதே ஒருமுறையாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதும் அவரது தீராத கனவு.
ஆனால், எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை அது நிறைவேறவே இல்லை. இது தனது வாழ்நாள் அவமானமாக எண்ணி மனதுக்குள் புழுங்கித்தவித்தார்,
முத்தமிழ் அறிஞர்.
மூன்றாவதாக அண்ணன், தம்பிகள் இறுதிவரை ஒற்றுமையாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டும் என்பதும் நிறைவேறவே இல்லை.
போராட்டக் காலத்தைத் தவிர அவமானமான முறையில் கைது ஆகக் கூடாது என்று நினைத்தார்…!
ஆனால், அதற்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. மூலம் ஆபத்து வந்தது.கதற கதற இழுத்துச் சென்று கைது செய்தார். இதில் தான் மிகவும் உடைந்தார்..!
பிரதமராக வேண்டும் என்கிற சிறிய ஆசை அவரது மனதில் இருந்தது.இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களை ஒப்பிடும்போது இவர் மிகச்சிறந்த ராஜதந்திரி மட்டுமல்ல அனுபவசாலியும் கூட. அதனால், கூட்டணி ஆட்சியில் பிரதமராக அமரும் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரதுஅந்த ஆசை நிறைவேறியிருக்கும்.
தான் பார்த்து பார்த்து கட்டிய புதிய தலைமைச்செயலகம்..! அந்த கனவுக் கட்டிடத்தில் அவர் ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணினார். அது பல்நோக்கு மருத்துவமனையாக மாறிய போது கலங்கிப்போனார் என்பார்கள்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் என்பது அவரின் கனவுகளில் ஒன்று அதையும் ஆட்சியாளர்கள் சிதைத்தார்கள்..!
செம்மொழிப் பூங்கா.? அது இப்போது புதர் மண்டிய காடானது.
ஆனாலும், கலைஞர் சாதனைகள் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானது இல்லை..! இன்னும் சாதிப்பார் என்று மக்கள்,தொண்டர்கள்..நினைக்கிறார்கள்…!
வாருங்கள் தலைவரே..சாதனைகளை தொடருங்கள்…!