பிரித்தானியாவில் Magnum ஐஸ்கிரீம் மற்றும் Calippos உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தங்கள் சமீபத்திய பொருட்களை விற்பனை நிலையங்களில் இருந்து அவசரமாக திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.
உணவு தர நிர்ணய நிறுவனத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து பிரித்தானியாவில் பிரபலமான பல பல்பொருள் அங்காடிகளில் இருந்தும் Magnum ஐஸ்கிரீம் மற்றும் Calippos உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பூங்காக்களை நாடும் நிலையில், அல்லது குடியிருப்பில் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ளும் மக்கள் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என உணவு தர நிர்ணய நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொருட்களை வாங்கிய பல்பொருள் அங்காடிகள், தாங்கள் வாங்கிய கடைக்கு தயாரிப்புகளைத் திருப்பித் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், பின்னர் முழு பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.
Magnum ஐஸ்கிரீம் பொருட்களை பொறுத்தமட்டில், சமீபத்தில் அவர்கள் விற்பனைக்கு அனுப்பிய ஒருவகை ஐஸ்கிரீமில் பால் கலந்துள்ளனர்.
அதை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் குறுப்பிடவும் இல்லை. இதனால் பால் பொருட்களில் ஒவ்வாமை கொண்டவர்கள் உட்கொண்டால் அது மரணம் வரை ஏற்பட வாய்ப்புண்டு.
அதனால் குறிப்பிட்ட ஐஸ்கிரீம் பொருட்களை Magnum ஐஸ்கிரீம் திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.