Loading...
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் வைட்டமின்களில் வைட்டமின் இ- ம் உண்டு.
இதயத்தசைகள் ஆரோக்கியமாக இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுதல், அழற்சி மற்றும் கார்டியோவாஸ்குலார், என்னும் நோய் தடுத்தல், புற்றுநோய் பாதிப்பை குறைத்தல், இதய நோய், நீரிழிவு இருப்பவர்கள் வைட்டமின் இ போதுமான அளவு கொண்டிருந்தால் அதை கட்டுக்குள் வைக்க முடியும் என கூறப்படுகின்றது.
Loading...
இதற்காக மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சில இயற்கை உணவுகளை தினசரி எடுத்து கொண்டாலே போதும்.
அந்தவகையில் வைட்டமின் இ அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- வேர்க்கடலை இதய நோய் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. குறிப்பாக பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது. எனவே அன்றாட உணவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்ப்பதன் மூலம் வைட்டமின் இ பெறமுடியும்.
- உடல் மிக சோர்வாக இருக்கிறது. உடனடியாக ஆற்றல் வேண்டுமென்றால் தினமும் 8 பாதாமை நீரில் ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிட்டாலே போதும். தினம் 5 முதல் 8 வரை எடுத்துகொண்டால் உடலுக்கு வேண்டிய வைட்டமின் இ நிறைவாக கிடைக்கும்.
- சூரிய காந்தி விதை சிறந்த நோய் எதிர்ப்புசக்தியாக இவை கருதப்படுகிறது. கூடுதலக இவை கல்லீரல் செயல்பாட்டை சீராக வைக்க துணைபுரிகிறது. சாலட் வகைகள், சூப், நொறுக்குத்தீனிகள் போன்று சாப்பிடலாம். .
- வாரம் மூன்று அல்லது இரண்டு முறையாவது பசலைக்கீரையை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். அரைகப் அளவுள்ள கீரையில் தினசரி தேவைக்கான வைட்டமின் இ 16% நிறைந்துள்ளது.
- நன்றாக பழுத்த ஒரு அவகேடோவில் வைட்டமின் இ அளவானது தினசரி தேவைக்கு 20% அளவு கிடைத்துவிடும்.இதிலிருக்கும் பொட்டாசியம் சத்துகள் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதால் இவை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.
- ப்ரக்கோலி புரதம் மற்றும் வைட்டமின் இ நிறைந்த சிறந்த மூலாதார உணவாக பார்க்கப்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் ப்ரக்கோலி உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது .ப்ரக்கோலியை சூப் ஆக செய்து, கிரேவியாக செய்து சாப்பிடலாம்.
Loading...