‘தனுஷ் தங்கள் மகன்’ என்று சிவகங்கை தம்பதிகள் மதுரையில் வழக்கு தொடுக்க, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள் தனுஷின் பெற்றோர்.
11-ம் வகுப்பு படிக்கும் போது,தனுஷ் சொந்த குடும்பத்தை விட்டு வெளியேறி கஸ்தூரி ராஜாவுடன் வந்து தங்கியதாக சிவகங்கை தம்பதிகள் சொல்லுகிறார்கள்.
இந்த வழக்கு மதுரை கோர்ட்டில் நடந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் குஷ்பூ நிஜங்கள் என்ற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துகிறார் அல்லவா? அந்த பஞ்சாயத்து நிகழ்ச்சியில் தனுஷ் யார் மகன் என்பது பற்றித்தான் நேற்று டாப்பிக்…
அந்த நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது,’ 1994ம் ஆண்டிலிருந்து எனக்கு கஸ்தூரிராஜா குடும்பத்தை தெரியும். எனக்கே தனுஷுக்கு நடந்தது போல் நடந்துள்ளது.
1991ம் ஆண்டு சின்னத்தம்பி படம் ரிலீஸ். அப்போ திருநெல்வேலியில் இருந்த குடும்பம் ,’நான் தான் அவர்களின் 3 வயதில் காணாமல் போன மகள்’ என்றனர்.
அதெல்லாம் கூட ஓகே. கல்யாணம் ஆனா பிறகு கூட சிலர் என்னை அவர்கள் மனைவி என்று கூறி ஸ்டில்லை காட்டி அவ்வளவு பிரச்சனை செய்துள்ளனர் ” என்று கூறினார்.
சரி, சரி…இந்த பஞ்சாயத்தின் முடிவு…’ஏன் தனுஷ் நாங்கள் அவர் பெற்றோர் இல்லை என்று வெளிப்படையாக மறுக்கவில்லை?’ என்று கேட்டுள்ளனர் வழக்கு தொடுத்தவர்கள்.