நாம் உண்ணும் உணவு நமக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலை நேரடியாக சென்றடைகின்றன.
பழங்களை உண்ணும் போது அவற்றில் உள்ள உயிர் சத்துக்களும், தாதுப்பொருட்களும் ரத்தத்தில் கலந்து உடலை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.
மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி பழங்களில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் உள்ளன. இந்த பழங்களை உண்பதன் மூலம் பார்வைக்கோளறு, மாலைக்கண்நோய் குணமாகிறது. பப்பாளிப்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
கொய்யா மற்றும் எலுமிச்சையில் பி, சி உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இந்த கனிகளில் உள்ளன கொய்யாப்பழம் மலச்சிக்களை போக்கி மூல நோயை குணமாக்குகிறது. எலுமிச்சை அஜீரணத்தால் ஏற்படும் வாந்தி தாகத்தை போக்குகிறது.
இப்படி ஒவ்வொரு பழத்திலும் ஒரு உயரிய குணம். நமது விருப்பத்திற்கேற்ற பழங்களை அவ்வப்போதும், தேவையான அளவிலும் உண்ணும்போது உயரிய சத்துக்கள் நமக்குக் கிடைப்பதால், பழங்களை உண்ணும் பழக்கத்தை பழக்கமாக்கிக் கொள்வது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.