Loading...
கல்முனைப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கோழி இறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதுடன் கோழி இறைச்சியின் விலையும் திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 350 ரூபாவாக இருந்தது இது தற்போது 650 ரூபா வரை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Loading...
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 12.00 ரூபாவாக இருந்தது இது தற்போது 18.50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களா மீன்களுக்கும் கடும் தட்டுப்பாடு நில்வுகின்றது. இதனால் மீனுக்கான விலையும் அதிகரித்துள்ளது.
Loading...