முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்களின் காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருப்பதனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர் ரட்ணராசா தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். எனினும், மேலும் பல பொதுமக்களின் காணிகளில் முப்படையினர் தொடர்ந்தும் நிலைக் கொண்டுள்ளனர்.
இராணுவத்தினர் இவ்வாறு பொதுமக்கள் காணிகளில் தமது இருப்பை பலப்படுத்தி வருவது, அவர்கள் பொதுமக்களுக்கு எதிராக செயற்படுவாதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், வடக்கில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் பூர்வீக காணிகள் அனைத்தையும் விடுவிக்க நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் ஆண்டில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.