சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
powered by Rubicon Project அமெரிக்கா சீனா சண்டை காரணமாக உலக அரசியலில் மிகவும் கொதிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தற்போது சீனாவிற்கு வடகொரியா நேரடியாக ஆதரவு அழைக்க தொடங்கி உள்ளது.
சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக வடகொரியா வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா நெருக்கி வருவதை ஏற்க முடியாது. அமெரிக்கா வேண்டும் என்று சீனாவை அச்சுறுத்தி வருகிறது.
அமெரிக்கா தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறது. அமெரிக்கா தோல்வியை நோக்கி சரிந்து கொண்டு இருக்கிறது.
இதனால் முன்னேற்றத்தில் இருக்கும், வெற்றி பாதையை நோக்கி செல்லும் சீனாவை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது. மற்ற நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்து வந்தது. மற்ற நாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா உளவு பணிகளை செய்து வந்தது.
ஆனால் இப்போது அமெரிக்காவால் அப்படி செய்ய முடியவில்லை. அமெரிக்காவிற்கு தற்போது உலக அரசியலில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதற்கு சூரியன் எங்கே உதிக்கிறது, மறைகிறது என்று கூட தெரியவில்லை.
அமெரிக்காவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது. சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் ஏற்படும் கிரகணம் போல அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும் என்று வடகொரியா கடுமையாக குறிப்பிட்டு இருக்கிறது.
நாங்கள் இன்னும் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தந்தை முழுமையாக செய்யவில்லை. தென் கொரியா எங்களுக்கு எதிராக செயல்படுவதை இனியும் பொறுக்க முடியாது.
எங்கள் நாட்டில் அமெரிக்காவின் உதவியுடன் தென் கொரியா உளவு வேலைகளை செய்கிறது. தென் கொரியாவுடன் நாங்கள் செய்து இருக்கும் ஒப்பந்தங்களை இதனால் நீக்க வேண்டி வரும் என்று வடகொரியா கூறியுள்ளது.