காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபரை (கிரிஸ் பேய்) கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வார காலங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நிர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்துவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிரிஸ் பேய்களின் நடமாட்டம் காரணமாக பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அவ்வாறு நடமாடும் மக்களை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.