அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.
இரண்டாவதாக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மூத்த வீரர்கள் யூனிஸ்கான் (0), கேப்டன் மிஸ்பா உல்-ஹக் (4 ரன்), அசார் அலி (5 ரன்) ஒற்றை இலக்கில் நடையை கட்டினர்.
அதிகபட்ச ஓட்டமாக விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டார்.
அவுஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஜாக்சன் பேர்டு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
முதலில் பேட் செய்த அவுஸ்திரேலியா தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் 110 ஓட்டங்களுடனும், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 64 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 429 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பாக அணித்தலைவர் ஸ்மித்(130), ஹேண்ட்ஸ்காம்ப் (105), சதமடித்ததுடன் ரென்ஷா(71) அரைச்சதம் பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், வஹாப் ரியாஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான், மின்னொளியில் அவுஸ்திரேலியாவின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 43 ஓட்டங்கள் எடுத்திருந்த அந்த அணி அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
3வது விக்கெட் முதல் 8 வது விக்கெட் வரையிலான வீரர்கள் வெறும் 24 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அவுட்டாகினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி தனது சோகமான சாதனையை வேதனையுடன் பதிவு செய்தது.