ஆட்டிசம் குறைபாடுள்ள 14 வயதான சிறுவன் தாரீக்கின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸார் நால்வர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அளுத்கம – தர்கா நகர் பிரதேசத்திலுள்ள அம்பகஹ சந்தி பிரதேத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொலிஸார் சிறுவன் தாரிக் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தசம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 14 வயதான சிறுவனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான நேரடியான சென்று பார்வையிட்டார்.
இதன்போது சிறுவனை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்,
இதனையடுத்து ஆட்டிசம் குறைப்பாட்டுடனான தாரீகை தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் நான்கு பொலிஸாரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.