ஊரடங்கு உத்தரவு காலத்தில் மின்பட்டியலில் ஏதாவது தீர்க்கப்படாத சிக்கல்கள் இருப்பின், உடனடியாக முறையிடும்படி இலங்கையின் பொதுப்பயன்பாடுகள்
ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு கால மின் பட்டியல் தொடர்பாக சர்ச்சைகளையடுத்து, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தது.
ஆணைக்குழுவின் யோசனைகளை ஏற்று, இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை பொதுமக்களிற்கு அநீதி இழைப்படாத விதமாக மின் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், மின்சார கட்டணங்கள் தொடர்பாக இன்னும் தீர்க்கப்படாத சிக்கல்கள் இருந்தால், அவற்றைத் தெரிவிக்க இரண்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 0122 392 607, 0112 392 608 ஆகியவை தொலைபேசி எண்களிற்கு அறிவிக்கலாம்.
அல்லது, 0770 126 253 க்கு வெபர், வட்ஸ்அப் அல்லது ஐஎம்ஓ அனுப்பலாம். அல்லது இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.