இதன் பின்னர் சில மாதங்களில் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர்.
இந் நிலையில் சிறுமியின் மாமியாருக்கு இது தெரிய வந்ததையடுத்து அவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து திருமணம் முடித்த 19 வயது இளைஞரையும் சிறுமியின் தந்தை, தாயார் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை தலைமறைவாகியுள்ள சிறுமியின் மாமியாரின் கணவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கைதுசெய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன், சிறுமியின் தந்தை, தாயார் உட்பட 3 வரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் கடந்த புதன்கிழமை (03) ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.