அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இருப்பினும் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் ஆலோசனையிலேயே இருப்பதாக தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திட்டத்தை வெள்ளை யானை என கூறுகின்ற போதிலும், மத்தள சர்வதேச விமான நிலையம் என்ற ரீதியில் அதனை வர்த்தக நோக்கிற்காக அபிவிருத்தி செய்யவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தள விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் பங்குதாரர்களின் உதவி குறித்து அரசாங்கம் தேடுதல் நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றது என்றும் பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.