கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஸ்ரீலங்காவும் பிரித்தானியாவும் இணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்காவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,
கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை கண்காணித்து வரும் லண்டன் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் மருத்துவ நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்காவின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து நடத்தும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் 10 மில்லியன் ரூபாயை அன்பளிப்புச் செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊசி மருந்து தொடர்பான மாநாட்டில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.